செம்மணி நீதிக்கான போராட்டம்: நவம்பர் 17-இல் போராட்டத்திற்கு அழைப்பு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரத்தில் சர்வதேச நீதியை வலியுறுத்தி, எதிர்வரும் 17-ஆம் திகதி காலை 10.30 மணிக்கு செம்மணியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து, சர்வதேச நீதியைக் கோருவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றது.
நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. போராட்டத்தில் பொதுமக்களும் இளைஞர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு புதிய தலைமுறை மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.



