இன்று கொழும்பில் GMOA போராட்டம்; சுகாதாரத் தொழிலாளர் சங்கமும் தீவெங்கும் போராட்டம் · Updated

2026-11-08 · Updated 2026-11-10
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (Government Medical Officers' Association - GMOA), பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (நவம்பர் 10) கொழும்பில் (Colombo) போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் (Budget) வைத்தியர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளக் (allowances and salaries) குறைப்புகள் உட்படப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக, சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க (Dr. Chamil Wijesinghe) தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) முன்பாக, சங்கத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளின் (district branches) பிரதிநிதிகள் பங்கேற்பில் இப்போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
போராட்டத்தின் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு (hospital operations) எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் வைத்தியர் விஜேசிங்க உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், ஒன்றிணைந்த சுகாதாரத் தொழிலாளர் சங்கமும் (Joint Health Workers' Union) பல கோரிக்கைகளை முன்வைத்து, தமது உறுப்பினர்கள் இன்று தீவெங்கும் போராட்டங்களை நடத்தும் என அறிவித்துள்ளது.
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தமது குறைகளைத் (grievances) தீர்க்குமாறு அரசை வலியுறுத்துவதற்காகவே இப்போராட்டங்கள் நடத்தப்படும் என, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் (Ven. Tempitiye Sugathananda Thero) தெரிவித்துள்ளார்.



