சாவகச்சேரி வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்ததாகத் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.