சிறந்த பத்திரிகையாளர் விருதுகள் 2025: ஐந்து மூத்த ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது
சிறந்த பத்திரிகையாளர் விருதுகள் 2025 (Journalism Awards for Excellence 2025) நிகழ்வில், இலங்கை ஊடகத்துறையில் பல தசாப்தங்கள் பணியாற்றிய ஐந்து மூத்த ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் (Lifetime Achievement Awards) வழங்கப்பட்டன.
அசோக கூணதிலக்க (Asoka Goonetilleke) 1976 இல் லேக் ஹவுஸில் (Lake House) தனது ஊடகத் தொழிலை ஆரம்பித்து, மத்திய செய்திப் பிரிவு மற்றும் வெளிநாட்டுச் செய்திப் பிரிவில் பணியாற்றினார். பின்னர் 1982 இல் உபாலி பத்திரிகைகளில் (Upali Newspapers) இணைந்து திவைனாவின் (Divaina) விளையாட்டு ஆசிரியராக உயர்ந்தார்.
அனுர பண்டார ராஜகுரு (Anura Bandara Rajaguru) கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர்; 1980 இல் லேக் ஹவுஸில் ஜனதா மற்றும் யௌவுன் ஜனதா பத்திரிகைகளில் பணியைத் தொடங்கி, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றினார்.
சந்திரா பெர்னாண்டோ (Chandra Fernando) ஊடகத்துறையில் 45 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர். 1977 இல் தவச குழுமத்தின் சிந்தாமனி மற்றும் தினபதி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகத் தொழிலை ஆரம்பித்தார். ரோஹன் அபேவர்தன (Rohan Abeywardena) 1980 இல் சன் பத்திரிகையில் (Sun Newspaper) பயிற்சி ஊடகவியலாளராக அறிமுகமானார்.
மூத்த ஊடகவியலாளர் அரியரத்ன கனேகொட (Ariyaratne Ganegoda) 1944 இல் பிறந்தவர்; 1966 மத்தியில் ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்தார். இவர்கள் ஐவரும் இலங்கை ஊடகத்துறைக்கு ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.


