ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது GLP-1 எடை குறைப்பு மாத்திரை: Foundayo-வுக்கு TGA அங்கீகாரம்

Therapeutic Goods Administration (TGA), ஆஸ்திரேலியச் சந்தைக்கு இரண்டாவது GLP-1 எடை குறைப்பு மாத்திரையை அங்கீகரித்துள்ளது. மருந்து நிறுவனமான Lilly தயாரிக்கும் Foundayo-வின் இந்த அங்கீகாரம், இம்மாத ஆரம்பத்தில் Wegovy (semaglutide)-இன் மாத்திரை வடிவத்துக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து வருகிறது.
வரும் நாட்களில் தனியார் மருந்துச் சீட்டு மூலம் மாத்திரைகள் கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தது.
Pharmaceutical Benefits Scheme (PBS) அமைப்பிலுள்ள சவால்களை ஒப்புக் கொண்ட Lilly Australia-வின் பொது முகாமையாளர் Dr Manny Simons, அவை ஒரே இரவில் மாறாது என்றாலும், நிறுவனம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், Foundayo மற்றும் ஏனைய புதுமையான மருந்துகளுக்கான அணுகலை விரிவாக்கும் வழிகளை ஆராய கூட்டரசுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் கூறினார்.
PBS பட்டியலில் இடம்பெறாத நிலையில், நோயாளிகள் மாத்திரைகளுக்கு முழு தனியார் விலையையே செலுத்த வேண்டும்; வளர்ந்து வரும் எடை குறைப்பு மருந்துச் சந்தையில் மானிய அணுகல் தொடர்ந்து திறந்த கேள்வியாக உள்ளது.