சமூக வலைதளப் பயன்பாடு: மாணவர்களில் 52% பேருக்கு டிஜிட்டல் (digital) மன அழுத்தம் (stress) - ஆய்வு

சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் 10-13 வயதினருக்கு 20% மன அழுத்தம் (stress) ஏற்படுகின்றது என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. 14-16 வயதினரிடையே இது 12% ஆகக் குறைவாக உள்ளது.
மொத்தத்தில் 52% மாணவர்கள் மிதமானது முதல் கடுமையான மன அழுத்தத்தை (stress) அனுபவிப்பதாகவும் அந்த ஆய்வில் (study) தெரியவந்துள்ளது.
10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 14 முதல் 16 வயதுடைய இளம் பருவத்தினரைவிடச் சமூக வலைதளப் பயன்பாட்டால் அதிக மன அழுத்தத்தைச் (stress) சந்திப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சண்டிகர் மற்றும் ஹரியானாவின் (Haryana) பஞ்ச்குலா மாவட்டத்தைச் சேர்ந்த 1,306 மாணவர்களிடம், முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (research) நிறுவனம் (PGIMER) நடத்திய ஆய்வில் இவ்விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களின் அளவுக்கதிகமான பயன்பாடு மாணவர்களின் உறக்கம், கவனம் மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் திரை நேரத்தைக் (screen time) கண்காணித்து, வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் நேரடி சமூக தொடர்புகளுக்கு ஊக்குவிப்பு வழங்குமாறு பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



