சிபிடி, டிஎச்சி பொருட்களுக்கு அமெரிக்கக் கூட்டாட்சித் தடை; டிசம்பர் 11 முதல் அமல்

அமெரிக்காவில் கஞ்சாவின் (cannabis) மிதமான வகையான ஹெம்பில் (hemp) இருந்து தயாரிக்கப்படும் பல சிபிடி (CBD), டிஎச்சி (THC) பொருட்களுக்கு வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் கூட்டாட்சித் தடை (federal ban) அமலுக்கு வரவுள்ளது. நி்திரை, மன அழுத்த (stress) நிவாரணம் (relief) போன்றவற்றிற்காக இப்பொருட்களைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அனுமதி பெற்ற மருத்துவ (medical) அல்லது பொழுதுபோக்கு (recreational) கடைகளில் விற்கப்படும் மரிஜுவானா (marijuana) பொருட்களுக்கு இத்தடை பொருந்தாது. எனினும், ஹெம்பிலிருந்து தயாரிக்கப்படும் மிட்டாய்கள் (gummies), எண்ணெய்கள், பானங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் சட்டவிரோதமாகும். ஒரு பெட்டிக்கு 0.4 மில்லிகிராம் (milligram) மேல் டிஎச்சி உள்ள எந்த ஹெம்ப் பொருடும் விற்கத் தடை விதிக்கப்படுகிறது.
2018 இல் நிறைவேற்றப்பட்ட வேளாண்மைச் சட்டத்தின் (farm bill) பின்னர், ஒழுங்குமுறைகள் (regulations) இன்றி இச்சந்தை பல பில்லியன் டொலர் (dollar) அளவுக்கு வளர்ந்தது. குழந்தைகளுக்கு அபாயகரமான பொருட்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிய பெற்றோர், சில செனட்டர்களின் (senators) ஆதரவுடன், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவில் (budget bill) இத்தடை இணைக்கப்பட்டது.
போரில் பணியாற்றிய வீரர்கள், முதலுதவியாளர்கள் (first responders) உட்படப் பலர் தங்கள் அன்றாட நலனுக்காக இப்பொருட்களை நம்பியுள்ளனர்; அவை ஒரே இரவில் மறைந்துவிடும் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. பல இலட்சம் வேலைகளும் பல பில்லியன் டொலர் மதிப்பும் ஆபத்தில் உள்ளதாகத் தொழில் தரப்பினர் கூறுகின்றனர்.
இரு கட்சிகளையும் சேர்ந்த சில செனட்டர்கள், மாநிலங்கள் இத்தடையிலிருந்து விலக்கு பெற அனுமதிக்கும் மசோதாவை (bill) முன்வைத்துள்ளனர்; டிசம்பர் காலக்கெடுவும் மீண்டும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான தடைக்குப் பதிலாகப் பாதுகாப்பான ஒழுங்குமுறைகளை உருவாக்க முடியும் என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.
