“டிரோன்களால் (drone) எங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்” - அச்சத்தில் வாழும் ஸப்போரிசியா மக்கள்

உக்ரைனின் (Ukraine) தென்கிழக்கில் உள்ள ஸப்போரிசியா பகுதி ஒரு காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலிருந்து வந்த மக்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக விளங்கியது. ஆனால் இன்று அப்பகுதியே தினசரி தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்தான முன்னணியாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரே ஒரு தாக்குதலில் மட்டும் 50 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து நடைபெறும் டிரோன் தாக்குதல்களால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடுகிறது.
பிரியோப்ரஷெங்கா என்ற கிராமத்திலிருந்து தப்பிவந்த வொலோதிமிர் என்ற குடிமகன், தமது கிராமத்தில் இப்போது வெறும் 8 பேர் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கூறுகிறார். அவர் தற்போது ஸப்போரிசியா நகரில் உள்ள ஒரு தங்குமிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
“டிரோன்கள் எங்களைக் குறிவைத்தே தாக்குகின்றன” என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். சந்தைகள், குடியிருப்புப் பகுதிகள், பேருந்து நிறுத்தங்கள் என எங்கும் பாதுகாப்பு இல்லை என்பதே அவர்களின் அனுபவம்.
மனிதநேய அமைப்புகளின் கணிப்புப்படி, முன்னணிக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்களும் நோயாளிகளும் (patient) ஆவர்; வெளியேற முடியாமல் ஆபத்துக்குள் சிக்கியுள்ளனர்.



