தன்னிச்சையான சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது - ஜனாதிபதி (president) அனுர (Anura) உறுதி

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் உத்தேச சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைப் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி அனுர (Anura) குமார திஸாநாயக்க (Dissanayake) தெரிவித்துள்ளார். தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதிகாரத்தில் நீடிப்பதற்காகச் சட்டத்தைப் பயன்படுத்தும் நோக்கம் தமது நிர்வாகத்திற்கு இல்லை என்றும், வாக்காளர்கள் தீர்மானித்தால் பதவியை விட்டு விலகத் தயார் என்றும் அவர் கூறினார். தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் (opposition party) முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


