பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் கூட்டத் தலைவராக நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa)
முதலாவது பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் (BIMSTEC Health Ministers’ Meeting) தலைவராக இலங்கையின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 11ஆம் திகதி கொழும்பில் தொடங்கிய கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
பிராந்திய பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு (public health security), தொற்றுநோய் கட்டுப்பாடு (communicable disease control), சுகாதார அவசரநிலைகளுக்கான கூட்டுத் தயார்நிலை (emergency preparedness), தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாகும்.