சிமெண்ட் மூட்டை விலை ரூ. 100 உயர்வு

இலங்கையில் (Sri Lanka) 50 கிலோகிராம் எடை (weight) கொண்ட சிமெண்ட் மூட்டையொன்றின் விலை 100 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பான அறிவிப்பு ஞாயிறன்று (நவம்பர் 8) வெளியிடப்பட்டது.
புதிய விலைத் திருத்தம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்டுக்கும் இறக்குமதி (import) செய்யப்படும் சிமெண்டுக்கும் ஒரேபோலப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் கட்டுமானச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகச் சொந்த வீடுகளைக் கட்டும் தனிநபர்களும் கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவது குறித்த கவலைகள் நிலவும் நிலையிலேயே இந்தப் புதிய விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



