சாவகச்சேரி: ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களைச் சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடி படையினர், அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றி மூவரையும் கைது செய்தனர்.
ஒருவரிடமிருந்து 13 கிராம் 710 மில்லிகிராம், மற்றைய இருவரிடமிருந்து தலா 1 கிராம் 300 மற்றும் 1 கிராம் 400 மில்லிகிராம் என மொத்தம் 16 கிராம் 410 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைதானவர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

