ஹார்முஸ் (Hormuz) நீரிணை: இந்தியக் (Indian) கப்பல்களுக்கு ஈரான் (Iran) சிறப்பு அனுமதி - 4 ஆபத்துகள் (risk/danger) குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

ஈரான் (Iran) - அமெரிக்கா (America) இடையிலான போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் (Hormuz) நீரிணை வழியாகப் பயணிக்க இந்தியக் (Indian) கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என ஈரான் (Iran) அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு (India) ஓரளவு நிம்மதியை அளித்தாலும், இந்த அனுமதிக்குப் பின்னால் நான்கு முக்கியமான ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹார்முஸ் (Hormuz) நீரிணை திகழ்கிறது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீடித்து வரும் ஈரான் (Iran) - அமெரிக்கா (America) மோதலால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதுடன், உலக நாடுகள் விலைவாசி உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளன.
இந்தச் சூழலில்தான், இந்தியா (India), சீனா (China), கத்தார் (Qatar) மற்றும் ஈராக் (Iraq) ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஈரான் (Iran) நாடாளுமன்றத்தின் (parliament) தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் (Hyatt) மொகத்தம் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர், இந்தியாவிடமிருந்து (India) மருந்துப் (medicine) பொருட்களைப் பெறுவதற்காக இந்தியக் (Indian) கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், சீனாவின் (China) அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டுக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் (Iran) இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு (India) எரிபொருள் கிடைப்பதில் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பார்க்கப்பட்டாலும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். போர் இன்னும் முடிவடையாத சூழலில், ஹார்முஸ் (Hormuz) பகுதியில் இந்தியக் (Indian) கப்பல்கள் மீது தவறுதலாக தாக்குதல் நடைபெறக்கூடும் என்பது முதலாவது ஆபத்து.
இரண்டாவதாக, ஈரானுடன் (Iran) தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா (America) பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவதாக, இந்தப் போர்ச்சூழலில் ஹார்முஸ் (Hormuz) நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு காப்பீட்டுக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக போர் அபாயக் (risk) காப்பீட்டுப் பிரீமியம் உயர்ந்தால் கப்பல் போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும். இதனால் ஈரான் (Iran) வழங்கும் அனுமதியால் கிடைக்கும் லாபம் கூடுதல் செலவுகளால் குறையக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நான்காவதாக, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இந்த அனுமதியை ஈரான் (Iran) மாற்றியமைக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியா (India) உள்ளிட்ட நாடுகளின் கப்பல் போக்குவரத்து ஈரானின் (Iran) அரசியல் முடிவுகளைச் சார்ந்திருக்கும் சூழல் உருவாகலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு, ஹார்முஸ் (Hormuz) நீரிணையில் இந்தியக் (Indian) கப்பல்களுக்கு ஈரான் (Iran) வழங்கும் அனுமதி, உடனடியாகப் பார்க்கும்போது இந்தியாவுக்கு (India) நிம்மதியளிக்கும் நடவடிக்கையாக இருந்தாலும், பல்வேறு சவால்களையும் உள்ளடக்கியதாகவே பார்க்கப்படுகிறது.



